ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யும் வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சம்மாந்துறை அலுவலகம் திறப்பு விழாவும்,பொது கூட்டம் சம்பந்தமான கலந்துரையாடலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் தலைமையில் நேற்று (10.09) இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரணிலின் வெற்றி கொள்ளையர்களின் வெற்றி எனவும், ரணில் வென்றால் ஈனர்களின் அட்டூழியமும், அராஜகமும் தொடரும். இஸ்லாமிய “கத்னாவை” மனித வதை என்றவர்களை ஆதரிப்பதா?, நிபுணத்துவ குழுவின் ஆலோசனைப்படி “ஜனாஸாக்களை” எரிப்பது தான் சரியென வாதம் புரிந்த “அநுரவை” ஆதரிப்பதா? போன்ற பல கேள்விக்கான பதிலை இன்று (11.09) சம்மாந்துறை மீயன்னா சந்தியில் பொதுமக்களுக்கு தெளிவுட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சௌபீர், மத்திய குழு செயலாளர் எம்.எஸ்.எம் அசாருதீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி யூ. கே சலீம், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம், சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் அர்சாத் இஸ்மாயில் கிளை தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








