வந்துரவ பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளார்.

வெயங்கொடை வந்துரவ பிரதேசத்தைச் சேர்ந்த லலித் குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக இவ்விருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து வாள்வெட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைக்கப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here