குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த போது டிப்பர் வாகனம் மோதிய நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று(19.09.2024) அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே அந்தோனி அல்பிரட் -அனுஷன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.








