வன்னிமாவட்டத்தில் 387 வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எ. சரத்சந்திர தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில்  வன்னிமாவட்டத்தில்  306081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 128585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86889 வாக்காளர்களும் மன்னார் 90607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 387வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் இன்று பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கடமைகளுக்காக வன்னிமாவட்டத்தில் 4796 அரச ஊழியர்கள் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன்வவுனியாமாவட்டத்தில்பொலிசார்,விசேடஅதிரடிப்படையினர், ஊர்காவற்படை என 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

இதேவேளை வவுனியாவில் இதுவரை 36சிறியளவிலான தேர்தல் முறைப்பாடுகளே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சாதாரண வாக்குஎண்ணும் பணிகளுக்காக வவுனியாவில்12,முல்லைத்தீவில் 8,மன்னாரில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,  தபால்வாக்குகள் எண்ணுவதற்காக10 நிலையங்களும்  எனமொத்தமாக 37வாக்குஎண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் வாக்குகள் நாளைமாலை 6 மணியளவில் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான ஏற்ப்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here