மன்னார் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் 10 மணி வரையும் 28.2 வீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்   க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணியளவில் வாக்களிப்புகள் ஆரம்பமாகியது.

இந்த நிலையில் மன்னார் தாராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் காலை 11 மணியளவில் வாக்களிப்பை மேற்கொண்டார்.

மேலும் தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் 10 மணி வரையும் 28.2 வீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்   க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here