நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21.09) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே,

நுவரெலியா 80%, மொனராகலை 77%, பொலன்னறுவை 78%, இரத்தினபுரி 75%, கம்பஹா 80%, கொழும்பு 75% – 80%, அம்பாறை 70%, கிளிநொச்சி 68%, புத்தளம் 78%, களுத்துறை 75%, காலி 74%, வவுனியா 72%, மன்னார் 72%, பதுளை 73% ,அம்பாந்தோட்டை 78%, கேகாலை 75%, அநுராதபுரம் 75%, மட்டக்களப்பு 69%, குருணாகல் 75%, திருகோணமலை 76%, கண்டி 78% – 80%, முல்லைத்தீவு 71 %, கிளிநொச்சி 68 %, மாத்தளை 74 %

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here