சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட  சஜித் பிரேமதாச, ‘எக்ஸ்’ செய்தியில், இந்தத் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு ஆர்வத்தைத் தூண்டியதாகக் கூறியுள்ளார்.

மேலும் “நாங்கள் அனைவரும் கனவு காணும் வலுவான, வளமான இலங்கையைக் கட்டியெழுப்ப அந்த ஆர்வத்தை ஒன்றிணைப்போம்”  என தெரிவித்துள்ளார்.

“உண்மையான இலங்கையர்கள் என்ற வகையில், எங்களின் நம்பிக்கை இறுதியில் மேலோங்கும். இந்தத் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத ஒரு ஆர்வத்தைத் தூண்டியது, மேலும் நாம் அனைவரும் கனவு காணும் வலுவான, வளமான இலங்கையைக் கட்டியெழுப்ப அந்த ஆர்வத்தை ஒன்றிணைப்போம். எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் நம்பிக்கையால் நான் பணிந்துள்ளேன், தொடர்ந்து உங்களுக்கு சேவை செய்வேன். வாழ்த்துகள் @anuradisanayake , உங்களுக்கு மிகவும் நல்வாழ்த்துக்கள் மற்றும் பணியை நிறைவேற்ற எனது பூரண ஆதரவு உங்களுக்கு இருக்கும்” என எம்.பி சஜித் பிரேமதாச தனது ‘X’ செய்தியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here