கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ச பத்திராஜாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வாதியான விஜித ஹேரத் சாட்சியமளிக்கவிருந்தார்.

எவ்வாறாயினும், விஜித ஹேரத் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, இன்று அமைச்சரவை அங்கத்தவராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளமையினால், சாட்சியமளிக்க வேறொரு திகதியை கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஹேரத்தின் சாட்சியத்தை நவம்பர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், குறித்த திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

சந்திரவன்ச பத்திராஜாவுக்கு 2000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here