பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (24) நெலும் மாவத்தையில் நடைபெற்றுள்ளது.

அதில், ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கட்சி முடிவு செய்துள்ளது.

அத்தோடு, முன்னதாக கட்சியில் இருந்து விலகியவர்களில் பலரை மீண்டும் இணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here