திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்கோ பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன்  ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று(26) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யபா்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 140 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here