இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தொடா் கனமழை காரணமாக, சுமத்ரா தீவின் சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கக் கொண்டிருந்த தங்கச் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 15 போ் உயிரிழந்தனா். மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 3 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்; இன்னும் 25 போ் புதையுண்டுள்ளனா். அவா்களை மீட்புக் குழுவினா் தேடிவருகின்றனா்.

இது தவிர, கனமழை மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை கிராமமான நகாரி சுங்காய் அபுவிலும் மண்ணில் புதையுண்டிருக்கக் கூடியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here