LONDON, ENGLAND - MAY 06: King Charles III on the balcony of Buckingham Palace, London, following the coronation on May 06, 2023 in London, England. The Coronation of Charles III and his wife, Camilla, as King and Queen of the United Kingdom of Great Britain and Northern Ireland, and the other Commonwealth realms takes place at Westminster Abbey today. Charles acceded to the throne on 8 September 2022, upon the death of his mother, Elizabeth II. (Photo by Samir Hussein/WireImage)

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுள்ளார்.

மேலும் இந்த முக்கியமான நேரத்தில் இலங்கைக்கு வழிகாட்டுவதில் சாத்தியமான அனைத்து வெற்றிகளையும் அவர் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியின் கீழ் இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே உள்ள நெருங்கிய உறவு மேலும் ஆழமடைவதை காண்போம் என மன்னர் சார்ள்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

“COP29 நெருங்கி வருவதால், நமது நாடுகள் கூட்டாளிகளாகவும், நவீன காமன்வெல்த் உறுப்பினர்களாகவும் இணைந்து நமது பெருங்கடல்களைப் பாதுகாக்கவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும், காலநிலை அபாயங்களைச் சமாளிக்கவும் இணைந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் அவர்களினால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் சார்ள்ஸ் மன்னரின் இச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here