சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான அலோக பண்டார பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அலோக பண்டார உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இன்று (03.10) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அலோக பண்டாரவிற்கு நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here