வெள்ளவத்தை கடற்கரையில் நேற்றைய தினம் (03.10) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
40 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நீல நிற சட்டை மற்றும் நீண்ட கால்சட்டை அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.








