அரசியல் நியமனம் பெற்றவர்களை அரச சேவைகளுக்கு மாற்றுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தவறிவிட்டதாகவும், அதனை தொடர்வதாகவும் முன்னாள் சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறுகிறார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முஜிபுர் ரஹ்மான்,
ஜனாதிபதியின் அண்மைக்கால அரச சேவைகளுக்கான நியமனங்கள் அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் என சுட்டிக்காட்டினார்.
“பெரும்பாலான அரச துறை ஊழியர்கள் ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கு வாக்களித்தனர். 60% – 70% வாக்குகள் NPP க்கு கிடைத்ததால் அஞ்சல் வாக்குகள் இதை நிரூபிக்கின்றன.
எவ்வாறாயினும், அரச சேவைகளில் பொருத்தமான நபர்களுக்குப் பதிலாக, ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதால், அரச துறை ஒரு பிரச்சினையை எதிர்கொள்கிறது என அவர் கூறியுள்ளார்.
அரச துறையினர் இதனை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த அவர், அரச சேவைகளுக்கு அரசியல் ரீதியாக நியமனம் பெற்றவர்களை ஜனாதிபதி அகற்றி, தகுதியான ஊழியர்களுக்கு இத்துறையில் மேல்நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
இல்லையெனில் எதிர்காலத்தில் அரச துறைக்குள் நெருக்கடியை ஏற்படுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.








