நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின், கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (06.10) கைதுசெய்துள்ளனர்.
நொச்சியாகம, ரம்பாவெவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரும் அனுராதபுரம் திஸ்ஸவெவ வீதியில் வசிக்கும் 45 வயதுடையவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபரிடமிருந்து 60 கிராம் ஐஸ் போதைப்பொருள், 830 மில்லிகிராம் ஹெரோயின், 570 மில்லிகிராம் கேரளா கஞ்சா, மற்றும் 500 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








