இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மலையகப் பாதையில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில், கொழும்பு கோட்டை மற்றும் எல்லக்கு இடையில் பகல் வேளைகளில், காலை 7:30 முதல் மாலை 5:30 வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும்.

எல்லக்கும் தெமோதராவுக்கும் இடையிலான ஒன்பது வளைவுப் பாலத்தில் இந்திய-இலங்கை கூட்டு திரைப்படம் படமாக்கப்படுவதனால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எல்லக்கு அப்பால் பதுளைக்கு பயணிக்கும் பயணிகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படுவார்கள்.

மேலும், இந்த காலப்பகுதியில் எல்ல மற்றும் பதுளைக்கு இடையில் முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களைக் கொண்ட பயணிகளுக்கு சொகுசு பஸ் சேவை கிடைக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here