அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில்,

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் கடந்த 1 ஆம் திகதி அன்று சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

போதைப்பொருள் கடத்தல்கள், திருட்டு மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் ஆகியவை தொடர்பில் பல்வேறு வழக்குகள் காணப்படும் நான்கு கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றிருந்தனர்.

தப்பிச் சென்ற கைதிகளில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தலைமறைவாக இருக்கின்றார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைதிகள் தப்பிச் செல்வதற்கு உதவி செய்ததாக கூறப்படும் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here