பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, சர்வஜன பலயவின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று கையொப்பமிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியை உருவாக்கி அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் நம்பிக்கையுடன் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்றத்தில் பொதுமக்களுக்காக குரல் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.எனமேலும் குறிப்பிட்டுள்ளார்.








