எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகலுடன் நிறைவடையவுள்ள நிலையில், தேசியப் பட்டியல் வேட்பாளர்களை சமர்ப்பிக்கும் கட்சிகளுக்கான வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 99A உறுப்புரையின் கீழ், தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தில் தகுதியான தேசிய பட்டியல் வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையின் சனத்தொகையை சரியான முறையில் பிரதிபலிப்பதாகவும் பெண்களின் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் இந்தப் பட்டியல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நியமனங்கள் அல்லது தேசியப்பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளவர்கள் மாத்திரமே விதிவிலக்குகள் இன்றி பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியும் எனவும் ஆணைக்குழு கட்சிகளுக்கு நினைவூட்டியுள்ளது.

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டங்களுக்கு இணங்க தேசியப் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here