புத்தளம், பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆடிகம – ரஸ்நாயக்கபுர வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர் 5 அடி 6 அங்குலம் உயரமுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






