மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை இந்த பொதுத் தேர்தலினூடாக இலங்கை தமிழரசுக் கட்சி வழங்கும் என அந்த கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் விரும்பியது கிடைத்திருக்கிறது.
இந்த தேர்தலில் ஆற்றலுள்ள படித்த இளையோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது மக்கள் விரும்பும் மாற்றத்தின் முதல்ப் படியாகும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்ச்சை குழு 11 இல் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று ஹட்டனில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
குறித்த ஊடுக் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட குறித்த சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார், பராம்பரியமாக ஏமாற்றி வருபவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் மலையக மக்கள் தங்களது அபிலாஷைகளை அடைந்து கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.








