அம்புலுவாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமது திட்டத்திற்கு அதிகாரிகளால் இடையூறு ஏற்படுவதாக தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.







