ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் உயிரிழந்தது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஹனியே கொல்லப்பட்டதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக பொறுப்பேற்ற யாஹ்யா சின்வார் காஸா இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டு பேசியிருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது,
ஹமாஸ் தலைவரின் மரணத்தை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் தீமைக்கு மரண அடி விழுந்துள்ளது. தீய சக்தி அழிந்துவிட்டது. பிணை கைதிகளை விடுவிக்கும் வரை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.







