புதையல் ஒன்றில் இருந்து பெறப்பட்ட பழங்கால பெறுமதியான 04 விலையுயர்ந்த இரத்தினக் கற்களை வைத்திருந்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

விசேட அதிரடிப் படைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய கண்டி விசேட அதிரடிப்படை முகாமின் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த தேடுதல் நடவடிக்கையின்போது புதையல் ஒன்றில் இருந்து பெறப்பட்ட 04 விலையுயர்ந்த இரத்தினக் கற்களை வைத்திருந்த தலத்துஓயா, ஹகுரன்கெத்த, கெங்கல்ல பிரதேசங்களில் வசிக்கும் 47, 49, 53 வயதுடைய மூவர் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தலத்துஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here