தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வே தமது பிரதான நோக்கமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் கட்சியின் பிரதான இலக்கு தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு.
நிரந்தர அரசியல் உரிமை இல்லாத நாட்டில் எங்களுக்குக் கிடைக்கும் எந்தவொரு சலுகையும் பிரயோசனம் அற்றதாகவே இருக்கும்.
ஆகையால் முதலாவது பணியாக எங்களது விடுதலை போராட்டத்தினை முன்னெடுத்து தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தினை முன்னெடுப்பதாகும் என இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.








