ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை விட கொலை செய்வதே மேல் என தெரிவித்துள்ளார்.

மேலும் சேறு பூசும் பிரச்சாரங்கள் மூலம் தம்மை வீழ்த்துவது எளிதல்ல.

“என்னை வெறுப்பவர்களிடம், சேறுபூசி என் நற்பெயரைக் கெடுக்காமல், பல தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது அல்லது கொல்லப்பட்டது போல் என் வாழ்க்கையையும் அழித்துவிடுங்கள்” என்று கூற விரும்புகிறேன்.

தேசத்திற்காகவும் அரசியலுக்காகவும் தனது உயிரை தியாகம் செய்ய தயார் என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

“இது சேறு பூசுவதை விட சிறந்தது. என் குணத்தை அழிப்பதை விட என்னைக் கொல்வது மேல்” என்று அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here