ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்திருந்த போதிலும் அவற்றை மறைத்த தரப்பினரே, தற்போது அதன் விசாரணை தொடர்பில் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
75 ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர்கள் தற்போது குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.
ஏப்ரல் 21 தாக்குதலின் போதும் அமைதியாக இருந்தவர்கள் தற்போது தங்களிடம் கேள்வி எழுப்புவதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.








