புத்தளம், நாகவில்லு பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள்  வெள்ளிக்கிழமை (01.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 08 கிராம் ஐஸ் போதைப்பொருள் , 320 வெளிநாட்டு சிகரட்டுகள், 100 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 440 லீற்றர் கோடா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here