பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் (07) நிறைவடைவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 27ஆம் திகதி முதல் இன்று வரை வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8) முதல் அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

நாளை தொடக்கம் பொதுத் தேர்தல் நடைபெறும் நவம்பர் 14ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அஞ்சல் நிலையத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அஞ்சல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here