நவ குருந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஹோமட பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பாகங்களை வைத்திருந்த ஒருவர் நேற்று (08.11.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய குருந்துவத்த கடவீதிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக நவ குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவ குருந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தம்பகல்ல-கொலொன்கஸ்கந்த பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவ தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 59 வயதுடைய கொலொன்கஸ்லந்த-பதுலுவெல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here