கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்திலிருந்து நேற்றிரவு வருகைதந்த குறித்த நபரை நேற்றிரவு சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் சோதனையிட்டபோது அவரது பையிலிருந்து குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர், மருதனைப் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரெனத் தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து சுமார் 5 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








