பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (நவ.11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
அந்தவகையில் பொதுத் தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள இறுதிக்கட்ட பேரணிகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் கம்பஹா மாநகர சபை மைதானத்திலும் பிலியந்தலை சோமவீர சந்திரசிறி மைதானத்திலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் கொழும்பு அளுத்கடையில் தனது கடைசி பேரணியை நடத்தவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) இறுதிப் பேரணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பங்கேற்புடன் தங்காலை கார்ல்டன் இல்ல வளாகத்தில் நடைபெறவுள்ளது.








