விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பினை சூட்சுமமான முறையில் பயண பொதியில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் போலிஸாருக்கு இன்று (12.11.2024) கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக பேருந்தை சோதனையிட்ட பொழுது சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 26 லீற்றர் கசிப்பினை போலிஸார் பறி முதல் செய்துள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை இன்றைய தினம் (12.11.2024) கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.









