எப்பாவல, கடியாவ யாய 10 ஆம் பகுதியில் இன்று (12) காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
84 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை குறித்த பெண் தனது வீட்டில் இருந்து வெளியில் முற்றத்துக்கு வந்த போது தோட்டத்தில் மறைந்திருந்த காட்டு யானை பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








