வடமாகாண ஆளுநர் வேதநாயகன் வலி வடக்கில் இடம்பற்ற மணல் கொள்ளை சம்பந்தமான விசாரணை அறிக்கை கிடைக்கப் பட்டும் நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைப்பதாக வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வன்னிய சிங்கம் பிரபாகரன் குற்றம் சட்டினார்.

இன்றைய தினம் (17.11.2024) ஞாயிற்றுக்கிழமை யாழ் ஊடக அமையத்தில இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 2022 ஆம் ஆண்டு வலி வடக்கில் இடம் பெற்ற பாரிய மணல் கொள்ளை சம்பவத்தில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வடமாகாண ஆளுநர் செயலகம் மாவட்ட அரசாங்க அதிபர்  மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் விசாரணை குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணை இடம்பெற்ற நிலையில் விசாரணை அறிக்கை வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அறிய கிடைக்கிறது.

முன்னாள் ஆளுநர் பிஎச்எம் சாள்ஸ் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தடுத்து வந்த நிலையில் தற்போதைய ஆளுநராக பதவியேற்ற வேதநாயகனிடம் குறித்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் தகவல் வழங்கியிருந்தேன்.

பதவியேற்று ஐம்பது நாட்கள் கடந்துள்ள நிலையில் நான் வழங்கிய முறைப்பாட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை எனக்கு அறிய தரவில்லை.

அதேபோல் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கும் கடிதம் அனுப்பி இருந்தேன் இதுவரை எனக்கு பதில் அனுப்பவில்லை.

மே ஜனாதிபதிகளுக்கு கடிதம் அனுப்பிய நிலையில் ஒரு மாதத்திற்கு உற்பட்ட காலப்பகுதியில் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தொடர்பில் முறைப்பாட்டாளரான எனக்கு அறியத் தருவார்கள்.

ஆகவே ஊழலை ஒழிக்கிறோம் என ஆட்சிக்கு வந்த அனுரா அரசாங்கம் அதனை செயற்பாட்டில் காட்ட வேண்டும் என்பதோடு வட மாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் அசண்டயீனமாக இருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here