அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை யுக்ரைன் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

வடக்கு யுக்ரைன் எல்லைப் பகுதியில் குறித்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகளில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஒரு ஏவுகணை சேதத்தை ஏற்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் யுக்ரைன் நடத்திய 8 ஏவுகணை தாக்குதல்களில் இரண்டு மாத்திரமே ரஷ்யத் தரப்பினரால் தடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த விடயத்தில் யுக்ரைன் எந்தவித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

இதேவேளை, மோதலை அதிகரிப்பதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் அமெரிக்கர்கள் இல்லாமல் குறித்த உயர் தொழில்நுட்ப ஏவுகணைகளை இயக்குவது சாத்தியமற்ற விடயமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவ நிபுணர்களால் குறித்த ஏவுகணைகள் இயக்கப்பட்டுள்ளன என்பதனை தங்களது தரப்பு புரிந்து கொள்வதாகவும், அதற்கேற்ப பதிலளிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here