17 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஷ் அணியுடனான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 24, 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இந்தநிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்தா கல்லூரியின் வீரர் கித்ம விதான பத்திரனவும் உப தலைவராக மருதானை புனித ஜோசப் கல்லூரியின் செனுஜ வெகுங்கொடவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த அணியில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் சுழல் பந்துவீச்சாளர் விக்னேஷ்வரன் ஆகாஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், அவர் 17 வயதுக்குட்பட்டோருக்கான மாகாண அணிகளுக்கிடையிலான தொடரில் தம்புள்ளை அணிக்காக விளையாடியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here