2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 2,312 பரீட்சை நிலையங்களில் இன்று ஆரம்பமாகிறது.

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 333,185 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

தற்போது பெய்து வரும் கடும் மழையினால் ஏற்படும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் உதவி தேவைப்பட்டால் 117 அல்லது 1911 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் அறிவித்துள்ளது.

பரீட்சை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, முப்படையினருடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here