பரந்தன் பூநகரி, செல்வி புரம் பகுதியில் வீதியின் கரையில் நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று இனம்காணப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது பூநகரி பள்ளிக்குடா பகுதியைச் சேர்ந்த செல்லையா கனிஷ்டநாதன் என்ற (வயது 69) முதியவர் என இனம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்








