இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட நுவரெலியா பேருந்து சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அங்கிருந்து 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் களவாடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை குறித்த சந்தேக நபர்கள் இந்த நிதியைக் களவாடுவதற்கு அங்கு பிரவேசித்துள்ளனர்.

நீண்ட காலமாக அவர்கள் இந்த திருட்டு சம்பவத்தைத் திட்டமிட்டிருந்ததாக காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கொலை செய்யப் பிரவேசித்த சந்தேக நபர்கள் காவல்துறையால் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் அந்த பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here