கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் திரு உபாலி பன்னிலகேவின் பதவியை இரத்துச் செய்யுமாறு ஆணை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அபிநவ நிஸாபா முன்னணியின் தலைவர் திரு.ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் திரு. உபாலி பன்னிலகே தேசிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டதாகவும், அவர் ருஹுணு பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானப் பிரிவில் பேராசிரியராக கடமையாற்றியதாகவும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

அரச சேவையில் ஈடுபட்டிருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்வது அரசியலமைப்பின் 91வது பிரிவின் கீழ் சட்டத்திற்கு முரணானது எனவும், அது பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு தகுதியற்றது எனவும் சுட்டிக்காட்டிய மனுதாரர், அதனை செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்குமாறு கோரியுள்ளார். 

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி உபாலி பன்னிலகே, ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்ட வழக்கும் இந்த மனுவை சமர்பித்த திரு.ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here