திட்டவட்டமான அளவுகோல்களின் பிரகாரம், நாளாந்த நெல் குற்றும் கொள்ளவு உயர்ந்தபட்சம் 25 மெற்றிக்தொன் வரைக்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு (கூட்டுறவுச் சங்க நெல் ஆலைகள் உள்ளடங்கலாக) அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் சலுகை வட்டி வீதத்தில் உயர்ந்தபட்சம் 50 மில்லியன் ரூபாய்கள் வரைக்கும் நெல் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறையை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானந்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.






