தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, ரயில்வே திணைக்களம் 4 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.

அதன்படி, இந்த ரயில் கடந்த 10 ஆம் திகதி முதல் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்புக் கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இரவு 7.30 மணிக்கு ஒரு ரயில் புறப்படும் என்றும் மற்றைய ரயில் பதுளையில் இருந்து மாலை 5.40 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தைப்பொங்கல் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்குப் போதுமான பஸ்கள் இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here