தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 100 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

வழக்கமான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மேலதிக பேருந்துகள் இயக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, போதுமான தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here