ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக மாகாண குற்றப்பிரிவுகளை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.
தற்போது தென் மற்றும் மேல் மாகாணங்களில் இவ்வாறான பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய ஏழு மாகாணங்களிலும் இவ்வாறான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளதாக வீரசூரிய தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதிலும் இந்தப் பிரிவுகள் தீவிரப் பங்கு வகிக்கும்.
இந்த குற்றப்பிரிவுகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை உன்னிப்பாக ஆராய்ந்து அவற்றை ஒடுக்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் பரிசோதகர் வலியுறுத்தினார்.







