கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகிபுரம் முக்கம்பன் பகுதியில் அன்றைய தினம் 24.01.2025 வயலுக்குச் சென்ற கணவன் மறுநாள் வரை 25.01.2025 காணவில்லை என மனைவி தேடி சென்ற பொழுது வயல் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் 38 வயதுடைய சின்னத்துரை காந்தரூபன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரையான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








