யாழில் பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

  யாழ்ப்பாணம் – குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த ராஜசுந்தரம் கமலாதேவி என்ற 80 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்துள்ளார். கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டு கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here