புத்தளம் ரயில் மார்க்கத்தில் 55ஆம் கட்டையில் உள்ள ரயில் கடவையில் திருத்தப்பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக குருணாகல் – புத்தளம் வீதியில் ரயில் கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என இன்று வெள்ளிக்கிழமை (07/02/2025) இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில்வே திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதால் நாளை சனிக்கிழமை (08/02/2025) மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (09/02/2025) குருணாகல் – புத்தளம் வீதியில் ரயில் கடவை ஊடான பகுதி மீண்டும் மூடப்படும்.
நேற்றைய தினமும் திருத்தப்பணிகளினால் இந்த வீதி மூடப்பட்டது.
இந்த நடவடிக்கையால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அசௌகரியத்தை குறைத்து கொள்வதற்கும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








