கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 573 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் வெளிநாட்டு பணவனுப்பல் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.








